தேர்தலில் மோதல் ; 20 வீடுகள் சேதம்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் தொடர்பில்  ஏற்பட்ட மோதலில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரசுப் பள்ளியொன்றில் இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றையதினம்  நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரசுப் பள்ளியொன்றில்  துவங்கி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வந்தது.

மதியம் மூன்று மணியளவில் அங்கு வந்த பாமக கட்சிக்காரர்கள் சிலர் திருமாவளவனின் பானை சின்னத்தை போட்டு உடைத்துள்ளனர். 

இதனால் ஆவேசமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இரு தரப்பினர் இடையேயும் சண்டை மூண்டது. அதில் வி.சி.க தொண்டர் ஒருவரது மண்டை உடைக்கப்பட்டது.

அதற்கு எதிர்வினையாக பொன்பரப்பியில் சிலரது இரு சக்கரவாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு நடைபெற்ற மோதலில் சுமார் 20 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பதற்றத்தைக் குறைக்க  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment