வறட்சியின் கொடூரம் ; பல இலட்சம்பேர் பாதிப்பு


நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 67 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்15 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 182 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 67 ஆயிரத்து 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 175 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 97 குடும்பங்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆயிரத்து 71 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 9ஆயிரத்து 339 குடும்பங்களும், மாத்தளை மாவட்டத்தில் 8ஆயிரத்து 391 குடும்பங்களும், அம்பாறை மாவட்டத்தில் 3ஆயிரத்து 797 குடும்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் 4ஆயிரத்து 617 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 465 குடும்பங்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 28 குடும்பங்களும், குருணாகல் மாவட்டத்தில் ஆயிரத்து 939 குடும்பங்களும், கேகாலை மாவட்டத்தில் ஆயிரத்து 523 குடும்பங்களும், மாத்தறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 318 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 39 குடும்பங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 73 குடும்பங்களும், மொனராகலை மாவட்டத்தில் 340 குடும்பங்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 149 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 970 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment