இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேரடியாக உச்சங் கொடுக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கோடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களிலும் வவுனியா, அநுராதப்புரம் மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment