ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி  வலுவடைந்துள்ளதை சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க டொலருடனான ஒப்பீட்டில் நான்கரை சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.

அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் போன்றவை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்குக் காரணமாகும். 

கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதிவரை ரூபாவின் பெறுமதி மூன்று தசம் ஒன்பது சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அது நேற்று நான்கரை சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment