கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ட்ரான்ஸ் போர்மரே வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டியூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
மேலும் தேவாலய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் பெருந்திரளான மக்கள் தேவாலயத்திற்கு ஆராதனைக்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment