வவுனியா பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசலகூடத்திலிருந்து ஒருதொகை வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குற்றத்தடுப்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து
விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் போது முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தை சோதனையிட்ட சமயத்தில் மலசலகூடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், வெடிபொருள்கள் மீட்கபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு கைக்குண்டுகள் , மூன்று மிதிவெடிகள், பதினைந்து தோட்டாக்கள், இரு ஆர்பிஜி குண்டுகள் என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment