ஈரான் - அமெரிக்கா மோதல்!

ஈரான்  மற்றும் அமெரிக்காவுக்கு   இடையிலான பிரச்சனை    அதிகரித்துக் கொண்டே  செல்வதால், ஈரான் மீது முழுவதுமாக  100% பொருளாதாரத்  தடையை விதிக்க அமெரிக்கா   திட்டமிட்டுள்ளதாகத் தகவர் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு கட்டமாக தற்போது ஈரானிடமிருந்து  எண்ணெய்  வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் கோபமடைந்த ஈரான் கடல் வழி எண்ணெய்   ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை  மூடப் போவதாக  எச்சரிக்கை  விடுத்துள்ளது.

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என்ற  அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா அடிபணிந்துள்ளது.   

ஈரானிடம்  இருந்துதான் இந்தியா தற்போது 10% எண்ணெய்   தேவையைப்   பூர்த்தி  செய்து  கொள்கிறது. இந்த எண்ணெய்யையும்  இந்தியா இனி நிறுத்த போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சீனா,  துருக்கி  ஆகிய நாடுகளும்  அமெரிக்காவின் உத்தரவிற்கு கட்டுப்பட  வாய்ப்புள்ளது  என்கிறார்கள். இதனால்தான் கடல்   வழி  எண்ணெய்  ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ்   ஜலசந்தியை மூட  போவதாக  ஈரான் நாடு எச்சரிக்கை  விடுத்துள்ளது. இது எண்ணெய் வள நாடுகளை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியுள்ளது  .

ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக்,  ஓமன்,  சிரியா ஆகிய   நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் ஒரே   வழியாகும். இதை ஈரான்- ஓமன் நாடுகள் பிரித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.   

ஆனாலும் எப்போதும்  ஈரானின் கையே இதில் ஓங்கி  இருக்கும். இந்த  ஒரே  வழி  மூலம் தான்  கடல்  வழியாக  செய்யப்படும்    பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 90 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது.

இந்த நிலையில்தான் ஹோர்முஸ் ஜலசந்தி  மூட போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.   

அமெரிக்கா தங்களை   மீண்டும், சீண்டினால் இந்த ஹோர்முஸ்   ஜலசந்தியை மூடி விடுவோம். நாங்கள் எண்ணெய் ஏற்றுமதி   செய்ய கூடாது என்றால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்களை சீண்ட வேண்டாம் என்று ஈரான் எச்சரிக்கை   விடுத்துள்ளது. 

இதனால் எண்ணெய்   வள   நாடுகளுக்கு   இடையில்   பதற்றம்   நிலவி   வருகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment