யாழ்.குருநகர் பகுதி சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


51 ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து  இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.


இன்று அதிகாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியால் தாக்குதல்தாரிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று வருகிறது.


 யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பற்று வருகின்றன. அந்தவகையில் பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப் பகுதிகள் ஆகிய இடங்களில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.







Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment