ஆமையின் கண்ணீர் அருந்தும் வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை அருந்தும் சம்பவமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமேஷன் காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போதே இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சகதி நிறைந்த பகுதிகளில் வாழும் வண்ணத்துப் பூச்சிகளே இவ்வாறு ஆமைகளின் கண்ணீரை அருந்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உயிர்வாழத் தேவையான சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

இதனால் சோடிய ஊட்டச் சத்தைப் பெறுவதற்காகவே வண்ணத்துப் பூச்சிகள் இவ்வாறு செயற்படுகின்றனவாம்.

பொதுவாக ஆண் வண்ணத்துப் பூச்சிகளே ஆமைகளின் கண்ணீரை அருந்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை வீடியோ ஆதாரமாகவும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

இதேவேளைமனிதர்களின் சிறுநீரையும் வண்ணத்துப் பூச்சிகள் அருந்துகின்றமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment