குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் வறக்காபொல மற்றும் ஹெம்மாத்தகமக பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அப் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டே போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வறக்காபொலவில் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
அப் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் தொலைத் தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment