சுகப்பிரசவத்தை யூடியூப்பில் நேரலை செய்த பெண்

பெண் ஒருவர் தனது சுகப்பிரசவத்தை யூடியூப் சனலில் நேரலை செய்துள்ளார். இதனை இதுவரையில், 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்துள்ளது. 

Sarah Stevenson என்ற  26 வயதுடைய பெண்மணி பிரபல சுகாதார மற்றும் உடற்பயிற்சி யூடியூப் சனலை நடத்தி வருகிறார்.

இவர் சுகப்பிரசவத்தின்போது அனுபவித்த வேதனையை பகிர்ந்துகொண்டதன் மூலம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார். 30 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தனது உடலை அமைதிப்படுத்தி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

Sarah அனுபவித்த வலிகள் முதல் அவர் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அனைத்தும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதற்கு Sarah வின் காதலர் குர்த், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் உதவியாக இருந்துள்ளனர்.

Sarah பிரசவ வலியால் துடிக்கும்போது காதலர் குர்த் தனது காதலிக்கு ஆதரவாக இருந்ததை வீடியோவில் பார்வையாளர்களால் பார்க்க முடிந்தது. 30 மணிநேரம் போராடிய Sarah தனது மனதையும், உடலையும் கையாளுவதற்கு கடுமையாகப் போராடி இறுதியில் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து Sarah கூறியதாவது, அந்த வீடியோவில் ஒரு முறை கூட நான் அழாமல் இருந்தது நம்பமுடியாத தருணமாக உள்ளது. ஓரு குழந்தையைப் பெற்றெடுக்க நாம் எவ்வளவு அன்பினை செலவிட வேண்டியிருக்கிறது. 

இந்த வீடியோவைப் பார்த்து எனக்கு ஆதரவு அளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment