காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சின் காளி கேரக்டரில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அலெக்ஸ்சாண்ட்ரா என்ற ஆங்கில நடிகை.
மாடலிங் தொழில் செய்து வரும் , அலெக்ஸ்சாண்ட்ரா மாடலிங் கோ ஆர்டினேட்டராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரூபேஷ் குமார் என்பவர் அலெக்ஸாண்ட்ரா தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தைக் காட்டி அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் அப்படி முறைப்பாடுகள் எதுவும் தரவில்லை என்றும், ராகவா லாரன்ஸ் உதவியுடன் தான் பத்திரமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அலெக்ஸ்சாண்ட்ரா.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் குறிப்பிட்டிருப்பதாவது,
எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாகவும், நான் முறைப்பாடு செய்ததாகவும் வந்த செய்திகள் தவறானது. நான் எந்த கவர்ச்சி போட்டோ சூட்டும் எடுக்கவில்லை. யாரும் என்னை மிரட்டவுமில்லை.
எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணமும் ஆகவில்லை. குழந்தைகளும் இல்லை. நான் லாரன்ஸ் மாஸ்டரின் உதவியுடன் பத்திரமாக இருக்கிறேன். அவர் என் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறார். வீண்பழி சுமத்தும் இதுபோன்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.
0 comments:
Post a Comment