வடக்கில் பலத்த காற்றுடன் மழை

வட மாகாணத்தில் எதிர்வரும் மூன்று தினங்கள் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்  கூடுமென்றும் மக்களை அவதானமாக இருக்குமாறும்  யாழ்.மாவட்டச் செயலகம் எச்சரிக்கை செய்துள்ளது.

அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்கில் 28, 29, 30 ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும்.

எதிர்வு கூறப்படும் மழைவீழ்ச்சி 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் ஆகக் காணப்படுகிறது. ஆகவே வெள்ள மூழ்கடிப்பு நிலை ஏற்படும். 

சுமார் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். வேகமான காற்றுடன் அதி கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே வடக்கு மாகாண மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இடர் நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் 1990 என்ற நோயாளர் காவு வண்டி சேவை இலக்கத்துக்கும் அழைத்து சேவைகளை பெற்று கொள்ளலாம்-என்றுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment