நாடாளுமன்றில் இன்று விசேட அமர்வு

நாடாளுமன்றத்தில் இன்றையதின விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

 இந்த  அமர்வு தொடர்பிலான, அரசியல் கட்சித் தலைவர்களது கூட்டம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது   குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நிலைமை குறித்து மக்கள் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தார்கள். இது பற்றியும் எதிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

நாடாளுமன்றின் விசேட அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பித்து 2.00 மணிக்கு முடிவடையும். 

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் விசேட உரையாற்றுவார்கள்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment