அவசரகால சட்டம் அமுலுக்கான விசேட வர்த்தமானி

அவசரகால சட்டத்தை  அமுல்படுத்தவதற்கான விசேட வர்த்தமானி  நேற்று வெளியிடப்பட்டது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புபட்ட சட்ட 
விதிமுறைகளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டது.

நாடு மற்றும் மக்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல்,மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள், சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தினாலும், தேசிய அரச பேரவையின் 1978 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment