நாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளும் தொடர்பு பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூர் அடிப்படைவாத அமைப்பு ஒன்றே குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அந்த அமைப்புக்கு வெளிநாட்டு அமைப்புகளின் உதவிகள் கிடைத்திருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்களின் மூலம் அறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணைகளுக்கு வெளிநாடுகளின் உதவிகளைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளிநாட்டு தூதுவர்களைச் சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளார்.
குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உதவ அமெரிக்காவும், சர்வதேச பொலிஸாரும் உதவ முன்வந்துள்ளன.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐடி( மத்திய புலனாய்வுப் பிரிவு) மற்றும் அனைத்துலக பொலிஸ் அதிகாரிகள் குழு என்பன விரைவில் இலங்கை வரவுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment