திருமணம் செய்தவுடன் வீதிக்கு இறங்கி தேர்தல் பிரசாரம் செய்த மணமக்களால் மக்களை வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் இன்று நடந்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் 29 ஆவது தொகுதி தவிசாளர் ஸ்ரீஜித் (27) என்பவருக்கும் அஸ்வதி (23) என்பவருக்கும் இன்று காலை 7 மணிக்கு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் விருந்து தயாராக இருந்த போதிலும் உறவினர்கள், நண்பர்களிடம் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் நாங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு புதுமண தம்பதி வெளியேறினார்கள்.
மணம் முடிந்த அரைமணி நேரத்தில் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் இடதுசாரி முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்ரீஜித்தும், அஸ்வதியும் வாக்குச் சேகரித்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment