ஆபத்தில் வட்டுவாகல் பாலம்

வரலாற்று பெருமையை எடுத்துக்கூறும்  முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலம் வெடித்த நிலையில் காணப்படுவதால்  பயணிகள் பல அசௌகரியங்கள  எதிர்கொண்டுள்ளனர்.

போர் முடிவடைந்த பின்னரும் குறித்த பாலம் இதுவரையில் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பில், பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும் புனரமைப்புப் பணிகள்  மேற்கொள்ளப்படவில்லை.

இந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சீர்செய்யப்பட்ட நிலையில் தற்போது பாலத்தின் நடுப்பகுதியில் உடைப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தை நம்பி பல நூற்றுக்கணக்கான மீனவர்கள்  தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் வெடிப்பு  ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment