சாதனையின் உச்சத்தில் ரவுடி பேபி

தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது  'ரவுடி பேபி' பாடல். பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

பாடல் வெளியானதிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக யூடியூபில் தொடர்ந்து   சாதனைகளைப் படைத்து வரும் இந்தப் பாடல், இப்போது 2 மில்லியன், அதாவது 20 லட்சம் லைக்குகளைப் பெற்று மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

எந்த ஒரு தமிழ்ப் படத்தின் பாடலும் இதுவரையில் 2 மில்லியன் லைக்குகளைத் தொட்டதில்லை. முதல் முறையாக அந்த சாதனையை 'ரவுடி பேபி' பாடல் புரிந்திருக்கிறது. 

ஏற்கெனவே 350 மில்லியன் (35 கோடி) பார்வைகளைக் கடந்து 400 மில்லியன் (40 கோடி) சாதனையை நோக்கி அந்தப் பாடல் போய்க் கொண்டிருக்கிறது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment