மாடறுப்பு நிலையமொன்றின் கழிவுக் குழியில் விழுந்து நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வவுனியா , தாண்டிக்குளம் பம்பமடுவில் இன்று மதியம் நடந்துள்ளது.
குறித்த நிலையத்தின் கழிவுக் குழியை சுத்தம் செய்யச் சென்றபோதே குழியினுள் தவறி விழுந்து நால்வரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதித்த போதும் , மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் உயிரிழந்திருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாடறுப்பு நிலையம் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் உறவினரொருவருக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வவுனியா மருத்துவமனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment