உயிரிழப்பு 60 ஆக அதிகரிப்பு

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது.

குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரமே   வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை, ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக பாதிப்பிற்குள்ளான பிராந்தியங்களை நேரில் ஆய்வுசெய்த ஜனாதிபதி சிறில் றமபோசா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

கடற்கரையோரப் பிராந்தியங்களில் மேலும் வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இரு பல்கலைக்கழகங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment