தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
0 comments:
Post a Comment