பிரியாணி சாப்பாடு சிறுமியின் உயிரை காவு வாங்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் அரக்கோணம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
குளிர்சாதனப்பெட்டியில் வைத்த பிரியாணியை சுட வைத்து சாப்பிட்டதில் குறித்த சிறுமி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனிவாசன் என்ற கூலித் தொழிலாளி உறவினர் அளித்த பிரியாணியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாள் காலை சுட வைத்து தனது குழந்தைகள் நால்வருக்கும் கொடுத்துள்ளார்.
பிரியாணியை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 குழந்தைகளும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
எனினும் போகும் வழியிலேயே கோபிகா என்ற 5 வயது மகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 3 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment