அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
மாஸ்கோவிலிருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாகத் தரையிறங்கும்போது தீவிபத்து ஏற்பட்டது.
இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
விமானம் மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, விமானக் கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கி விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment