இலங்கையில் சுற்றி திரியும் இந்திய மீனவர்

இந்திய மீனவர் ஒருவர் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் இலங்கையில் சுற்றித்திரிவதை காணொளியில் கண்ட உறவுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர் ஒருவர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாககத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தந நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் சுற்றி திரிவதை யூடியூப் சனலில்   அவரது உறவுகள் பார்த்துள்ளனர்

இதனையடுத்து இலங்கையில் இருக்கும் மீனவரை மீட்டுத் தருமாறு தமிழ்நாட்டு அரசிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம்  5 ஆம் திகதி  விசைப் படகொன்றில், விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகிய நால்வர்  கடலுக்குச் சென்றனர்.  மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை  திரும்பாததால் இவர்கள் நிலை  தெரியாமல் உறவினர்கள் பல நாள்களாக தேடியுள்ளனர். 

இந் நிலையில் மீன்வளத் துறை சார்பாக கடலில் மாயமானவர்கள் பட்டியலில் இந்த நால்வரும் சேர்க்கப்பட்டனர்.  

இதனிடயே கடந்த மே மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரக்கூடிய யூடியூப் சனல் ஒன்றில் செய்திகள் வாசிக்கப்பட்டது.  இந்தக் காணொளியில், கொழும்பு பகுதியில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  பிச்சை எடுப்பவர்களின் புகைப்படங்கள் ஒளிபரப்பட்டது, 

அதில், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நரைத்த தலைமுடியுடன் முகத்தில் தாடியுடன் ஒரு பெரியவரை பார்த்தபோது அது தனது பெரியப்பா போல் உள்ளதை அறிந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனது அக்காவிடம் இந்த தகவலை தெரிவிக்க, உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி புகைப்படத்தில் இருந்தது மீனவர் பரதன் என்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் இன்று  குடும்பத்தினரை சந்தித்த மீன்வளத்துறை அதிகாரிகள் பரதன் காணாமல் போனது குறித்து எழுத்து பூர்வமாக மனு ஒன்றை  எழுதிப் பெற்று கொண்டனர். இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில்,

கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் மாயமானதாகவும் படகு உரிமையாளரிடம் கேட்டபோது தனது மகனையும் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் மாயமான நாளை பரதன் இறந்த நாளாக நினைத்து வருடா வருடம் குடும்பத்தினராக வழிபாடு நடத்தி வருகிறோம்; இந்த நிலையில் யூடியூப் சனலில் வந்த புகைபடத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தோம்.

மனநிலை பாதிக்கப்பட்டு கொழும்பு பகுதியில் சுற்றித் திரியும் பரதனை மீட்டு வர வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  கோரிக்கை மனு அளித்துள்ளோம் அவரை விடுவிக்குமாறு தமிழ்நாட்டு அரசு  இந்திய மத்திய அரசினூடாக இலங்கை அரசிடம் கோரும்” என்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment