ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்!





ரியல்மி Brand சமீபத்தில் இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி Brand விரைவில் ரியல்மி X எனும் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், ரியல்மி X ஸ்மார்ட்போன் இந்திய தரத்துக்கான சான்றை உறுதிப்படுத்தும் பி.ஐ.எஸ். (Bureau of Indian Standards - BIS) பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரியல்மி X இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. 

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA  வலைதளத்தில் சான்று பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பி.ஐ.எஸ். சான்றுகளின் படி RMX1901 மற்றும் RMX1945 மாடல் நம்பர்களை கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி X  வேரியண்ட்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிரான் 730 பிராசஸர் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக ரியல்மி X சீரிஸ் இருக்கும். சிறப்பம்சங்களை பொருத்தவைர ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, பாப்-அப் செல்ஃபி கேமரா, பின்புறம் டூயல் ஏ.ஐ. கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

இதன் பிரைமரி கேமராவை பொருத்தவரை 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0, 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறு. அந்த வகையில் சீனாவில் மே மாத வாக்கில் அறிமுகம் என தெரிகிறது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment