இருமுறை முயன்றும் மம்தாவை தொடர்பு கொள்ள முடியவில்லை - பிரதமர்!

ஆந்திரா மாநிலத்தின் சில மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பல மாவட்டங்களை நேற்று முன்தினம் மணிக்கு சுமார் 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பானி புயல் தாக்கியது.

இந்த புயலால் ஏற்படக்கூடிய சேதங்களை கணித்த மத்திய அரசு மேற்கண்ட மாநிலங்களுக்கு முன்கூட்டியே ஆயிரம் கோடி ரூபாயை பேரிடர் நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்திருந்தது. மேலும், புயல் பாதிப்பு நிலவரங்கள் தொடர்பாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

அதேவேளையில்,  மேற்கு வங்காளம் மாநில கவர்னருடன் மட்டும் பேசி புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மோடி, மம்தாவை தொடர்பு கொண்டு பேசாதது ஏன்? என நேற்று ஒரு புதிய சர்ச்சை வெடித்தது.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று பதிலளித்த பிரதமர் அலுவலகம், ’மம்தாவை நாங்கள் இருமுற தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். முதல்முறை அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை அழைத்தபோது, அவர் உங்களை தொடர்பு கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மம்தாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment