மினுவாங்கொடை வன்முறை 9 பேருக்கு விளக்கமறியல்

மினுவாங்கொடை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைதான சந்‍தேகநபர்கள் 9 பேரை  விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மினுவாங்கொடையின் பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட உடைமைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நேற்றிரவு 13 பேர்  கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் 9 பேரையே எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment