இலங்கை தமிழின அழிப்பு ; இந்தியாவிலும் நினைவேந்தல்

விடுதலைப் புலிகள்மீது விதிக்கப்பட்ட தடை  ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழினியன்.

விடயம் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளின்போது  நாடு கடந்த தமிழீழ பிரதமர் அறிக்கையின்படி  இலங்கை தமிழின விடுதலைப் போரின் போது உயிர் நீத்த அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்த நாளை நினைவு கூருவோம்

இதேவேளை  தமிழின அழிப்பையும் நினைவையும் தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடுவோம்.

இதன் மூலம் தமிழர்கள் அனைவரும் அன்று ஒரு நாள் கருப்பு பேட்ச் அணிந்து எங்கள் துயரத்தை வெளிப்படுத்த வேண்டும் - என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment