சற்று முன்னர் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில்  தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலதில் நடந்துள்ளது.

காஷ்மீரின்  சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுற்றி வளைத்தனர்.

இங்கு டிரகட் சுகன் ((Dragad Sugan)) என்ற கிராமத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷகர் இ தொய்பா ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக்  தகவலையடுத்து அடுத்து இராணுவம், சி.ஆர்.பி.எஃப். மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். 

அப்போது தீவிரவாதிகள் மறைவிடத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு தரப்புக்கும்  இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படையினர் இதுவரை இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment