வைத்தியர் சாபி தொடர்பான இடைக்கால அறிக்கை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபி தொடர்பாக விசாரணை செய்வதற்காக சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் சமரனாயக்க தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.
குறித்த குழு தற்போது வரை பல தரப்பினரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக சுகாதார ​சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment