இந்தியப் பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த சித்திக் அகமது டேனிஷ்னிஷ் என்பவரே நீர்கொழும்பு நகர் பள்ளியில் அனுமதியின்றி நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் பின்னர் செய்தி சேகரிக்க இவர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுமதியின்றிப் பள்ளியில் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் மே 15 ஆம் திகதி முற்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment