சென்னை பொலிஸாருக்கு வரும் விஷமத்தனமான தொலைபேசி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பற்றித் தங்களுக்குத் தெரியுமென்று கூறி, பலர் சென்னையில் பொலிஸாருக்கு ஏமாற்றும் நோக்கில் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துவதாக 'த இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
இலங்கைக் குண்டுத்தாக்குதல்களுக்கு தானே பொறுப்பு என்று உரிமைகோரி சென்னையிலுள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய 40 வயது நபரொருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்தனர்.
அந்த நபர் மனைவியுடனான பிரச்சினையைத் தொடர்ந்தே இவ்வாறு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை இலங்கை அகதிகள் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் குண்டொன்றை வைப்பதற்குத் திட்டம் தீட்டுவதாக கோயம்பத்தூரில் கிராமப்பகுதி பொலிஸாருக்குப் போலித் தகவலை வழங்கிய 53 வயது நபரொருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த நபர் தனது நண்பரொருவரைப் பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு தொலைபேசியில் பேசியதாக பொலிஸார் தெரிவித்தனர். தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பொலிஸாருக்கு இத்தகைய ஏமாற்றுத்தனமான அழைப்புக்கள் தொடர்ச்சியாக வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
'தினமும் 500 – 600 வரையான அழைப்புக்கள் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன. ஆனால் இலங்கைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன.
தங்களது மனைவிமாரை அல்லது நண்பர்களைப் பழிவாங்குவதற்காகவும் சிலர் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிரான தங்களது கோபத்தை வெளிப்படுத்த விரும்புகின்ற குடிகாரர்களிடமிருந்தும் சில அழைப்புக்கள் வருகின்றன. நாங்கள் இந்தத் தொலைபேசி அழைப்புக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவோம். ஆனால் விசாரணைக்குப் பிறகு தான் அவைவ விஷமத்தனமானவை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம்' என்று உதவி பொலிஸ் ஆணையாளரான கே.ஆனந்த் குமார் இந்து பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறாக விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்களை எடுக்க வேண்டாமென்று பொலிஸார் பொதுமக்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். தெனை மீறிச்செய்தால் இந்தியத் தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும். இத்தகைய அழைப்புக்கள் பெருமளவான மனிதசக்தியை விரயமாக்குகின்றன என்றும் ஆனந்த் குமார் கூறியதாக இந்து பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment