பேரணியில் கைக்குண்டு வீச்சு

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க.வினரின் வெற்றிப் பேரணியில்  கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு  இரு தொகுதிகளை மட்டுமே வென்ற பா.ஜ.க. இந்தத் தேர்தலில் 18 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இந்த நிலையில் பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

இதன்போது பேரணியில் சென்றவர்கள் மீது  கைக்குண்டு வீசப்பட்டது. இதில் எவருக்கும் காயமில்லை. திரினாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைக்குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் அது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment