முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான கம்லேஷ் பால்மிகி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் குர்ஜாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததையடுத்து அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும், அப்போது அவர் மர்மமான முறையில் உள்ளே இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
விஷம் அருந்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவரது, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment