அதிகாரத்தை மாற்ற தேர்தல் முறைமை மாற வேண்டும்

புலனாய்வுத் துறை அதிகாரிகளினால் கடந்த 2016 ஆம் ஆண்டு அடிப்படைவாத குழுவினரின் ஆயுதங்கள் தொடர்பிலும் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலும் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டதாகவும், அந்தவேளையில் தானும் அந்த இடத்தில் இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
வனாத்தவில்லுவில் காணப்பட்ட வெடி பொருட்கள் இருந்ததாகவும், அதனுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்ததாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அரசியல் அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினர் விடுதலை செய்யப்பட்டனர். அடிப்படைவாத செயற்பாடுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இருந்ததாகவும், இருப்பினும், அது 2015 ஆம் ஆண்டின் பின்னர்தான் ஆயுதக் குழுவாக பரிணாமம் எடுத்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதம் கையில் எடுத்தமை தொடர்பில் அறிக்கை கையில் இருந்தும், அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குள்ள அச்சத்தின் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதான கட்சிகள் உட்பட அரசாங்கத்திலுள்ள சகலரும்  சிறுபான்மை இனவாதிகளுக்கு தேவையான பிரகாரம் ஆடுவதாகவும், அந்த அரசியல்வாதிகள் பெரும்பான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாதிருப்பதாகவும் அத்துரலிய தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே தீர்வு தேர்தல் முறைமையை மாற்றுவதாகும் எனவும் கூறியுள்ள தேரர், குர்ஆனில் இதற்கு ஆதாரம் இருக்கின்றதோ தெரியாது எனவும் தெரிவித்துள்ளதாக இன்றைய தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment