பதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.

பா.ஜனதா கட்சி 303 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

கடந்த முறை பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயகத்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களை அழைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதே போல அண்டை நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அதிபர்களையும் அழைக்க மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர். ஒரிரு நாட்களில் இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எந்தெந்த நாட்டு தலைவர்களை அழைப்பது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அடுத்த மாதம் மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பூடான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களையும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment