19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் என தெரிவித்த ஜனாதிபதி இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளின் பேரில் தயாரிக்கப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு 19 திருத்த சட்டமே முக்கிய காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
19 ஆவது திருத்தினை ஒழித்தால் 2020 ஆம் ஆண்டு செழிமையான நாடாக இலங்கை மாறும் என்றும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும், 19 ஆவது அரசியலமைப்பினை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஜயம்பதி, சுமந்திரன் மற்றும்தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளின் பேரில் 19 ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சுதந்திர கட்சி எடுக்கும் எந்தவொரு முடிவையும் நான் பின்பற்றுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment