பனி விரிப்பின் கீழ் 50 ஏரிகள் கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50 இற்கும் மேற்பட்ட ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது 50 இற்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்டார்டிகாவிலுள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள் காணப்படுகின்றன.
எனினும், தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முன்னெடுத்த இந்த ஆய்வில் வட துருவப்பகுதியிலும் இவ்வாறான ஏரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
நிலப்பரப்பிற்கு மேலிருந்து வரும் அழுத்தமும், அடியில் இருந்து வரும் ஜியோதெர்மல் வெப்பமும் குறித்த ஏரிகளை திரவ நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment