பிரித்தானிய அழகிக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் முன்னாள் அழகிக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவரின் முன்னாள் காதலியும் வளர்ந்து வரும் நடிகையுமான Amaani Noor (21) இற்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
‘The Merciful Hands’ என்ற தீவிரவாத அமைப்பிற்கு நிதி வழங்கியதாகவே அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் வழக்கு விசாரணையை அவர் எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் கொடுக்கும் பணம் தீவிரவாதத்திற்கு உதவும் என்பதை அறிந்தே Amaani நிதியுதவி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment