தவறான விடயங்களுக்காக மீண்டும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

“இலங்கை மீண்டும் தவறான விடயங்களுக்காகத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது’ என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் ( Joern Rohde)  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கை தலைசிறந்த சுற்றுலாப் பயணத்தளமாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர்  இது இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறைக்கு சிறப்பானதொரு வருடமாக இருந்திருக்க வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியினாலும், அதற்குப் பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களாலும், முஸ்லிம்கள் மீதான வன்முறைகளாலும் அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி மறைக்கப்பட்டு விட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக் கூடிய அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்துள்ளது.

நான்கு கைதிகளுக்கு விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமை தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருப்பதாக ஜேர்மனியின் ஆளும் சமஷ்டிக் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கான வெளிவிவகார அலுவலகத்தின் ஆணையாளர் பார்பெல் கொஃப்லர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment