வன்னிப் பகுதியில் பெயர் மாற்றுவோர் தொகை அதிகரிப்பு

வன்னிப் பகுதியில் அழகான தமிழ்ப் பெயர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெயர்களை அதிகமானோர் அண்மைக்காலமாக மீண்டும் தமது பெயர்களை பழைய பெயர்களிற்கே மாற்றம் செய்வதாக மாவட்டச் செயலக பதிவாளர் அலுவகம் தெரிவிக்கின்றது.

2006ஆம் ஆண்டிற்கு முன்னர் வன்னிப் பகுதியில் பல சிறுவர்களின் பெயர்கள் தமிழ் பெயராக கானப்படவில்லை என்பதனால் சிறுவர்களின் பெயரை தமிழ் பெயராக பெற்றோர் விருப்பத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பலர் இரு பெயர் தடுமாற்றாம் சிலர் விரும்பாமை , சிலர் எண்சோதிடம் எனக் காரணம் காட்டியும் சிலர் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் கானப்படுகின்றனர்.

இதன் அடிப்படையில் பலரும் பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர்களை மூன்றாவது முறையாகவும் மாற்றம் செய்வது அதிகரித்துள்ளது. 

இது தொடர்பில் மாகாண பதிவாளர. நாயகத்தின் அலுவலகத்தில் விபரம் கோரிய சமயம் பலர். 

அவ்வாறு பெயர் மாற்றத்தில் ஈடுபடுவதனை உறுதி செய்த்தோடு பெயரினை எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒருவர் மாற்றுவது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனத் தெரிவித்தனர் .


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment