மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெறுவேர் புத்தளம் மாவட்டத்திலும் சமுர்த்தி உதவிகளை பெறுகின்றனரா என குறித்த மாவட்டத்மிற்கு அனுப்பி உறுதிப்படுத்தப்படவுள்ளதாக மாவட்டச் ணெயலகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெறும் நிலையில் புத்தளம் மாவட்டத்திலும் சமுர்த்தி உதவியை பெற்றுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றியமை தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெறும் அனைவரின் விபரங்களும் புத்தளம் மாவட்டத்மிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பட்டியல் உறுதி செய்யப்படவுள்ளது. இதேநேரம் பிற மாவட்டத்தில் உதவி பெறுவோர் குடும்பத்தின் ஏனைய அவ்கத்தவர்களின் பெயர்களில் உதவி பெறுவதாக கூறப்படுவதனால் அனைவரும் தேசிய அடையாள அட்டை இலக்கத்துடனேயே அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அவ்வாறு பிற மாவட்டத்தில் சமுர்த்தி பெறுவது கண்டறியப்பட்டால் உடனடியாகவே எந்த தயவும் இன்றி சமுர்த்தி கொடுப்பனவு முழுமையாக நிறுத்தவும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment