கரைச்சிப் பிரதேச சபை முதல் தடவையாக சோலைவரி அறவீடு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச சபையின் வரலாற்றில் முதல் தடவையாக சோலைவரி அறவீடுகள் நேற்று முதல் சம்பிரதாயபேர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
கரைச்சிப் பிரதேச சபையின்ங21 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் குறித்த பணிகள் முழுமை செய்யப்பட்டு அறவீட்டுப் பணிகளிற்கான கணிப்பீடுகள் பெறுமதி கணக்கிடப்பட்டு தற்போது உரிமையாளர்களிற்கு சிட்டை சமர்ப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் 7 வட்டார எல்லைகளிற்குள்ளும் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கியுள்ள நிலையில் இப் பணிகள் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள 7 வட்டாரங்களிலும் இருந்தும் ஆண்டிற்கு 80 மில்லியன் ரூபா சோலை வரியாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதோடு இந்த ஆண்டின் இறுதி அரையாண்டிற்காக 40 மில்லியன் ரூபா அறவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றுக் காலை சபையின் தவிசாளர் வேழமாலிதன் தலமையில் இடம்பெற்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment