மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் விளையாட்டுப் போட்டி

மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின்  நிகழ்வு நேற்று மாலை அடம்பன் ம.வி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்கள் சார்பாக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

விளையாட்டுக்குழுவின் தலைவர் மாந்தை மேற்கு பிரதேச செயலர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ், மேலதிக மாவட்டச் செயலர் எஸ்.குணபாலன்,  வடமாகாண விளையாட்டுத்துறை அதிகாரி ஆர்.குருபரன் மற்றும் பிரதேச செயலர்கள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு நிகழ்வுகளின் இறுதியில் 1 ஆம் இடத்தை மன்னார் பிரதேசச் செயலகமும், 2 ஆம் இடத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலகமும், 3 ஆம் இடத்தை முசலி பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.


















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment