“கைது செய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு யாரும் எனக்கு அழுத்தங்களை வழங்கவில்லை. ரிஷார்ட் என்னிடம் விபரங்களை கேட்டாலும் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய அவர் எந்த அழுத்தங்களையும் வழங்கவில்லை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளித்தபோது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அரசியல்வாதி அல்லது ஒரு தனிநபர் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனரா என்று தெரிவுக்குழு குழு இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியது. அப்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது,
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏப்ரல் 21 ஆம் தேதி, நான் இராணுவத்தை பாதுகாப்பில் ஈடுபட வைத்தேன். நான் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் அதிகாரங்கள் கொண்டு இராணுவம் சோதனைகள், தேடல்கள் மற்றும் கைதுகளை மேற்கொண்டது.
ஏப்ரல் 26 ஆம் தேதி, தெஹிவளையில் இஷாம் அகமது என்ற நபர் கைது செய்யப்பட்டார். ரிஷாத் பதியுதீன் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக் கொடுத்தார். எனக்கு அமைச்சரைத் தெரியும். இந்த நாடாளுமன்றத்தில் பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களை ராணுவ தளபதியாக நான் அறிவேன். அது நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் பேச அழைக்கிறார்கள். மற்ற நிகழ்வுகளைப் பற்றியும் அவர் என்னிடம் பேசியுள்ளார். அன்று அவர் என்னை அழைத்து இந்த பெயருள்ள நபர் கைது செய்யப்பட்டாரா என்று கேட்டார். அந்த நேரத்தில் நான் தெரியவில்லை என்றும் பின்னர் பார்த்து தகவல் தருகிறேன் என்றும் குறிப்பிட்டேன்.
இரண்டாவது முறையாக அவர் அழைத்தபோது நான் இன்னும் தேடுகிறேன் என்று சொன்னேன், அந்த நேரத்தில் என்னால் பதிலளிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் கொழும்பில் விசேட அதிரடிப்படை செயல்பட்டு வந்தது . இந்த பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அதனை ஆம் என்று உறுதி செய்தனர்.
0 comments:
Post a Comment