ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்! சபாநாயகர் கரு ஜயசூரிய

கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“எனது சிறுவயதில் நான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவைச் சென்று பார்ப்பதுண்டு. அவர் பதவி ஆசைகளுக்கு அடிபணியாமல் நாட்டுக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார்.
நான் சுத்தமான கரங்களுடனேயே எனது அரசியலை ஆரம்பித்தேன். அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.
இதுவரை நான் வகித்த பதவிகள் எவற்றுக்காகவும் நான் யாருடைய ஆதரவையும் கோரியதில்லை. அந்தப் பதவிகள் தானாக என்னை வந்தடைந்தன.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்பும் எந்தப் பதவிக்காகவும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்குத் தயார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது பலர் எனது பெயரைக் குறிப்பிடுகின்றனர். வேறு யாராவது கட்சியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் அவர்களுக்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை.
எனினும், கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் என” சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment