மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேவையான உறுப்பினர்கள் இல்லாததால் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
17ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
குறித்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. இதனால்  எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு 55 உறுப்பினர்கள் தேவையாகவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸூடன் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 5 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முயற்சிகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment