அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட்டிற்கு ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அது இன்னும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்தநிலையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவரின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அதுரலிய ரத்ன தேரரின் இப்போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சுமங்கள தேரர் ஆகியோர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment