கோட்டாபாயதான் ஜனாதிபதி வேட்பாளர்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸதான் எனவும், இதில் கலந்துரையாடல்களுக்கு இடமில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ல.பொ.பெரமுனவுக்கு பலமான வேட்பாளர் ஒருவர் உள்ளது போன்று, நிறைவான வேலைத்திட்டமும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தையும் நிறைவடைந்து, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீல. பொதுஜன பெரமுன நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தற்போதைய ஜனாதிபதிதான் ஜனாதிபதி வேட்பாளர் எனவும், எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் எனவும் கட்சியின் கருத்தைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment